Posts

கவிதை பக்கம்

Image
                                                                     உ பூவை (எ) பூலாங்ககுறிச்சி :  விருந்தோம்பலின்  முகவரியாம்!  மூவேந்தர்  ஆட்சி செய்த முத்தமிழ் நாடாம்.......... செந்தமிழ் நாட்டில் தன்னில், பரப்பளவில்  வங்கக்  கடலின் வாசல் தொட்டு பாசமிகு  மனிதர் வாழும் எண்ணிக்கையில் விண்ணை தொடும் கோட்டையாம் புதுக்கோட்டையில்..........   வறுமை நீக்கும் மழை போல வற்றாத நீரால் மக்களின் தாகம் தீர்க்கும் நன்னீர்க் குளம்..... வேண்டுவோருக்கு   வேண்டும்  வரம் அருளும் சிங்கார வடிவேலன் திருக்கோவில்..... வாழ்வில் உயர்வதற்கு உய்ய வழி காட்டும் ஊரணிக்கரை அரசமரத்து  விநாயகர்.....   அமுதினும் இனிய அறுசுவை   உணவை சமைக்கும் செட்டிநாட்டு பெண்களின்   சமையற் கலைநயம்...... காண்போரை வியப்பிலும் மழை நீர் சேகரிப்பை இல்லத்தில் அமைத்த கட்டிட கலை.............. காலை கதிரவனைப் போல  கடமை செய்யும் தன்மையும் அன்பையும் நற்பண்பையும் நாலும் பறை சாற்றும் மக்களும் ........... பூவை (எ ) பூலாங்குறிச்சியின்  வாசம் குறையாத மலர்கள்!!!!!!!!!                                                                  

சிங்கார வேலன் திருக்கோவில்-பூலாங்குறிச்சி

Image
பூவை என்று அழைக்கப்படும் பூலாங்குறிச்சி இன் பெருமை சேர்ப்பதே இந்த அழகான மலை மேகங்கள் தான் ;மலை காற்றை சுவாசித்தாலே துன்பமெல்லாம் பறந்து ஓடும் என்பது முன்நோர்களின் வாக்கு; ஏன் என்றால் மலை காற்றிக்கு மருத்துவ குணங்கள் ஆதிகம் உண்டாம் . கோவில் முன் அமைந்திருக்கும்  "இந்த திரு குலதின் தண்ணீர் என்றும் வற்றாத இளநீர்" ஆகும். இங்கு சுற்றயுள்ள ஊர்களுக்கு தண்ணீர் இங்கிருந்து பெரிதளவில் எடுத்த செல்கிறார்கள். நகரத்தார் பெருமைகளில் சிறந்தது நகரக்கோவில் அமைப்பதே! அந்த வண்ணம் நகர கோவில் ஆன சிங்கரா வடிவேலன் திரு கோவில் மிகவும் பெருமை வாய்ந்தது . அன்புடன்.......... செந்தில்  பூலாங்குறிச்சி  

விநாயகர் சதுர்த்தி

Image
" 9.9.2013 "அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் "

விநாயகர் சிறப்புகள்

Image
விநாயகர் சிறப்புகள் : பூலாங்குறிச்சி  என்றால் பெரிய ஊருணி கரையில் அரச வேம்பு மரத்து அடியில் அமர்ந்திருக்கும் ஆனந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.இந்த ஊருணி இல் எப்பொதும் தண்ணீர் வற்றாது என்பார்கள் .மேலும் தாமரை மலர்கள் நிறைந்து காணப்படும் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளிக்கும் வேழமுகத்து விநாயகரை தொழுது வாழ்வில் பயன் பெறுவோம்.

ஊரணிகரை அரசமரத்து விநாயகர்

Image
ஊரணிகரை அரசமரத்து விநாயகர்  "அட்புத  கீர்த்தி வேண்டின்  ஆனந்த வாழ்கை வேண்டின்  நற்பொருள் குவிதல் வேண்டின்  நலமெலாம் பெருக வேண்டின்  கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சிய  திருக்கை சென்று பணிந்து பாரிர்  பொய் இல்லை கண்ட உண்மை " ​                        -கவியரசு  கண்ணதாசன்